இன்று , என் நிஜப் பெயர் தெரியாதவர்களுக்கு கூட என் புனைப்பெயரான ” பாண்டா ” தெரியும் .
திரை அரங்கில் கத்திக் கூப்பிடுவார்கள் , சாலையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது எங்கோ சாலையில் செல்லும் இளைஞன் ” பாண்டா ” என்று சத்தமாய் சொல்லி – அவன் நண்பர்கள் அனைவரும் சிரிக்க , மாஸ் காமித்து நகர்வான், தொலைபேசியில் ” நீங்க பாண்டாவா ? ” என வேண்டுமென்றே கேட்டு அரம்பித்த அழைப்புகள் ஆயிரத்திற்கும் மேல் !
இவை அனைத்தும் எங்கோ, ஏதோ ஒரு வகையில் என்னை குத்திக் கிழித்தாலும் , இந்த உலகத்தின் இயல்பை , இங்கே இருக்கும் மனிதர்களை நினைத்து சிரிக்கவும் வைத்து இருக்கிறது .
ஆரம்ப காலத்தில் புனைப் பெயர் பயன்படுத்தி அழைத்தால் கோவம் அப்படி வரும் ! கையில் சிக்கினால் மாஸ்டர் பவானி போல விடாமல் புனைப்பெயர் சொன்னவனை குத்தி விடலாமா என்றெல்லாம் தோன்றும். இன்று அது அப்படியே மாறி , என்ன திட்டினாலும் மீறிப்போனால் ஒரு புன்னகையுடன் கடந்து விடுகிற மனப்பக்குவம் !
இது எங்கிருந்து வந்தது ? சில உண்மைகள் தெரிந்த பின்பு வந்த தெளிவு இவை .
. இங்கே எவனும் , வசையில்லாமல் வளர முடியாது .
. இந்த உலகம் இரக்கம் இல்லாதது , தொடமுடியாத உயரம் வளரும் வரை அது உன்னை நீச்சல் பழகும் சிறுவனை விளையாட்டிற்கு நீரில் அமுக்கி விளையாடும் இளைஞர்கள் போல் அமுக்கி விளையாடிக் கொண்டே இருக்கும் .
. ஆன்லைனில் ஒவ்வொருவனுக்குள் இருக்கும் மிருகமும் வெளியே வரும் . அவனுக்கு ரத்தம் வேண்டும் , அது எவனை , யார் குடும்பத்தை கெடுத்து என்றெல்லாம் இங்கே கவலை இல்லை .
கண்ணில் நன்றாய் தென்படுகிற இறை நீயாகி விட்டால் , ரத்தம் உரியும் அட்டைப் பூச்சிகள் ஆயிரம் தாங்கி உயிர் வளர்க்கும் காட்டு எருமையாவதை தவிர இங்கே வேறு வழிகள் இல்லை .
. என்னதான் வசவுகள் இருந்தாலும் , இங்கே நல்லவர்கள் காட்டும் அன்பு அத்தனையும் சகிக்க வல்லது . என்ன பார்த்திட கூட இல்லாத நண்பர்கள் , தங்கள் மொத்த வாழ்க்கையும் பகிர்ந்து பல முறை ஆறுதல் தேடி இருக்கிறார்கள் . தனக்கு வேலை கிடைத்த உடன், வீட்டிற்கு கூட சொல்லாமல் என்னை அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள் .
எனக்கு விளம்பரம் தரும் கிளையென்ட்ஸ் உரிமயாய் என்னை விளம்பரம் செய்யச் சொல்லிவிட்டு என்னை கேட்காமல் பணம் அனுப்புவார்கள். பாண்டிச்சேரியில் இரு மீனவ இளைஞன் என்னை பார்த்து youtube விடியோக்கள் செய்ய ஆரம்பித்து இன்று மாதம் 50,000 சம்பாரிப்பதாய் ஒரு ஒரு நடு இரவில் அழைத்து சொன்ன பொது எனக்கு
கண்ணீர் மட்டுமே மிஞ்சியது .
உண்மையை சொல்லப் போனால் , இந்த வசவுகள் தாங்குவது மிகக் கடினம். ” காசு வாங்கிட்டு படத்தை விமர்சிக்கிறான் ” என்றும் சொல்லும் எவனும் , தன் வார்டு கவுன்சிலரிடம் 2 கேள்விகள் என்னை கேட்பது மாறியே கேட்டிருப்பானா தெரியாது . 100 பேர் எரியும் கல் ஒருவனை மட்டுமே தாக்குகிறது என்ற அறிவு கூட இல்லாதவர்களுக்கு நான் எப்படி சொன்னாலும் அது ஏளனமாகவே தெரியும் .
நான் பெரிய அப்பாடக்கர் இல்லை – ஆனால் எனக்கு தெரியாத ஒரு துறையில் , பின்புலம் எதுவும் இல்லாமல் , எனக்கு தெரிந்தவற்றை செய்து , வளர்ந்து , இதோ இங்கு நிற்கிறேன் . அதுல உனக்கு பிரச்சனைனா என்னை நன்றாய் திட்டிக் கத்து , உன்னை பார்த்து சிரித்துக்கொண்டே என் வேலையை செய்து கொண்டிருப்பேன் . இன்னும் நூறு பேரை ஊக்கப்படுத்தி உன் கண்முன்னே அவர்களை ஜெயிக்க வைப்பேன் . எனக்கு நல்லதின் மேலும் , நற்செயல் மீதும் அலாதி நம்பிக்கை . என்னை காக்கும் அரண் அது !
இந்த 10 வருடம் கற்றுத் தந்த பாடங்கள் ஆயிரம், இந்த வசவுகள் என் உயிரை மெதுவாய் குடித்துக் கொண்டே என்னை ஓட வைக்கும் ஊக்க சக்தி !
Super anna… Keep grow…
Stay positive and keep going brother 😊
I never followed you on twitter, but I always see your twitter messages since last 3 years. You are such a positive & human being and you messages encouraged me more, thanks lot Anna. நீங்கள் மேலும் மேலும் உயர கடவுளை பிராத்தனை செய்கிறேன்
Good .. keep going ..
Bro..very Impressed…
Thanks bro! 🙂
Impressive, keep moving, God bless
அட இந்த பதிவு இன்னும் சிறப்பு. உங்கள் திரைவிமர்சனத்தில் கொஞ்சம் compromise அதிகமோ என தவிர்ப்பதுண்டு. ஆனால் உங்கள் அனுபவ பதிவுகள் படு நேர்த்தி. தவிர்க்காமல் பாராட்டுகிறேன்.